படுத்தபடுக்கையாக இருக்கும் மாமியாரை அடித்து நொறுக்கிய மருமகள்: வைரலான வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மருமகள் ஒருவர் படுத்த படுகையாக இருக்கும் தனது மாமியாரை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் ஜெயின். அவரது மனைவி சங்கீதா ஜெயின். அவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சங்கீதா சந்தீப்பின் 70 வயது தாயான ராஜ்ராணியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
ராஜ்ராணி படுத்த படுக்கையாக உள்ளவர். இது குறித்து அறிய வந்த சந்தீப் தனது மனைவியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. சங்கீதாவின் செயல் பற்றி அவர் பிறரிடம் கூறியபோது யாரும் அதை நம்பவில்லை. இதையடுத்து சந்தீப் சங்கீதாவை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க தனது தாயின் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தினார்.
கடந்த 5ம் தேதி சங்கீதா தனது மாமியாரை கயிறால் கழுத்தை நெறித்தார், செங்கல்லால் அவரது தலையில் அடித்தார், வெறுங்கையால் தலையிலேயே அடித்தார், அவரை கட்டிலில் இருந்து கீழே இழுக்க முயன்றார். இது அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த வீடியோவை சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த சம்பபவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சங்கீதா, சந்தீப் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications