பா.ஜ.க. ஊழல்களால் கொந்தளித்த மூத்த தலைவர் சாந்தகுமார்...'நிதானமாக' இருக்க மேலிடம் அட்வைஸ்
டெல்லி: பாரதிய ஜனதாவிலேயே ஊழலுக்கு எதிராக கலகக் குரல் வெடித்துள்ளது. ஊழல் புகார்களுக்கு உள்ளான நபர்கள் மீது பாரதிய ஜனதா கட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சாந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இதற்காக கட்சிக்குள் லோக்பால் அமைப்பை போல ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். அதே நேரத்தில் பா.ஜ.க. மேலிடமோ நிதானத்தைக் கடைபிடிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார், பாரதிய ஜனதாவின் மிக மூத்த தலைவர். அவர் அண்மையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், கடந்த ஓராண்டாக நற்பெயருடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து வந்த நிலையில், அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் திடீரென எழுந்தவை அல்ல.
அதன்பேரில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது அதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்காணிக்க லோக்பால் அமைப்பைப் போல கட்சிக்குள் ஒழுக்க நெறிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மக்கள், தங்களது கடைசி வாய்ப்பாக நம்பை நம்பியுள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று கூறியிருந்தார்.
ம.பி. வியாபம் முறைகேடு, லலித் மோடி விவகாரம், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்கள் என மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுக்கும் நிலையில் சாந்தகுமாரின் கடிதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் பாரதிய ஜனதா தலைமை பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டது.
Posted by Shanta Kumar on Sunday, July 19, 2015
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, சாந்தகுமாரின் கருத்துக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்புமே இல்லை. அவரை இதுவரை மூத்த தலைவராக கருதினோம்.. ஆனால் காங்கிரஸின் பொய் பிரசாரங்களை அவர் நம்பத் தொடங்கி தன்னிலையில் இருந்து விலகிவிட்டார்.. அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவின் ஊழல்களை முன்வைத்து உண்டு இல்லை என்கிற பாணியில் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சொந்த கட்சியிலேயே வெடித்திருக்கும் கலகக் குரல் பாரதிய ஜனதாவை கதிகலங்க வைத்துள்ளது என்பதே நிதர்சனம்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications