கதை முடிஞ்சது.. இனி "அந்த" வீரரால் அணிக்குள் வரவே முடியாது.. ஒரே இன்னிங்ஸில் கதையை முடித்த "கில்"
அஸ்வின் இதில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார்.
அகமதாபாத்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் தொடக்க வீரர் சுப்மான் கில் ஆடி வரும் விதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடந்தது. இதில் மோசமான ஆட்டம் காரணமாக.. முக்கியமாக பேட்டிங் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

டெஸ்ட் சாம்பியன்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்றால் இன்று நடக்கும் மேட்சில் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால் இன்னொரு பக்கம் நியூசிலாந்து - இலங்கை இடையிலான தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைய வேண்டும். அல்லது மேட்ச் டிரா ஆக வேண்டும். இந்த நிலையில் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் டிராவை நோக்கி செல்வது போல் உள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம். இதில் இந்திய அணியின் டாப் ஆர்டர் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.

என்ன நடக்கும்?
இதனால் மேட்ச் டிரா ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த மேட்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் டெல்லி பிட்ச் அளவிற்கு ஸ்பின் ஆகவில்லை. அதனால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் எளிதாகவே எதிர்கொண்டனர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. குவாஜா மட்டும் 180 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தார். அஸ்வின் இதில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார்.

சுப்மான் கில்
இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். புஜாரா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் சுப்மான் கில் நிதானமாக ஆடி வருகிறார். இதுவரை 197 பந்துகளில் 103 ரன்கள்எடுத்துள்ளார். இதில் 10 பவுண்டரி அடக்கம். அதேபோல் 1 சிக்ஸ் அடித்துள்ளார். மிக நேர்த்தியான டெஸ்ட் வீரராக அவரின் ஆட்டம் இன்று இருந்தது. அதோடு பால்ஸ் ஷாட் மிக மிக குறைவாக இருந்தது. இந்த வருடத்தில் இதோடு கில் அடிக்கும் 5வது சர்வதேச சதம் இது. இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் அடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகுல்
இவரின் இந்த அதிரடி ஆட்டம் காரணமாக இனி கே எல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்குள் வரவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக டெஸ்ட் அணிக்குள் வரவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெல்லியில் நடத்த இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் சொதப்பி வெறும் 1 மட்டுமே எடுத்தார் . அதே போட்டியில் முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமாக இரண்டாவது டெஸ்ட் மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.. இந்த நிலையில் தற்போது கில் ஆட்டம் காரணமாக இனி ராகுல் அணிக்குள் திரும்புவது கடினம் என்றே கருதப்படுகிறது.
-
கேப்டனாக சுப்மன் கில் அசுர வேட்டை.. 15 இன்னிங்ஸ்களில் 6வது சதம் அடித்து மிரட்டல்.. நெகிழ்ந்த தந்தை! -
8 சதங்கள் 15ஆக மாறியிருக்க வேண்டிய ‘மாஸ்’ கதை.. ரிஷப் பண்ட்டை துரத்தும் 90ஸ் சாபம்! ரசிகர்கள் சோகம் -
17 இன்னிங்ஸ்.. 6 சதங்கள்.. 1086 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளத் தொடங்கிய கேப்டன் சுப்மன் கில் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications