75 வயது முதியவருக்கு மோடி எப்படி மரியாதை வழங்குகிறார் என்பதற்கு இது சான்று... சித்தராமையா சாடல்
75 வயது முதியவரான எடியூரப்பா பவ்யமாக குனிந்து மரியாதை செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி கொடுக்கும் மரியாதைக்கு இது சான்று என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூர்: தேவ கௌடாவை ராகுல்காந்தி மரியாதை குறைவாக பேசினார் என்ற பிரதமரின் குற்றச்சாட்டுக்கு 75 வயதான எடியூரப்பாவுக்கு அவர் கொடுத்த மரியாதையை புகைப்படத்துடன் சுட்டிக் காட்டி சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க மும்முனை போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளே பிரதானமாக களத்தில் இறங்கியுள்ளன.
உடுப்பியில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியிருந்த மோடி, காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில் நாட்டின் உயர்ந்த தலைவர்களுள் தேவ கௌடாவும் ஒருவர்.

மோடியை புகழ்ந்து
அத்தனை மதிப்புடைய தலைவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை குறைவாக பேசியுள்ளார். அவர் மட்டும் என் வீட்டுக்கு வந்தால் வாசல் வரை வந்து அழைத்து சென்று திரும்பி வாசல் வரை வந்து வழியனுப்புவேன். அந்த அளவுக்கு நான் அவரை மதிக்கிறேன் என்று திடீரென பிரதமர் மோடி புகழ்ந்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுடன் ரகசிய கூட்டணி
இந்த பேச்சை கேட்கும் போது சித்தராமையா கூறியது போல் பாஜகவுக்கும் ஜேடிஎஸ்ஸுக்கும் ரகசிய கூட்டணி ஏதும் உள்ளதா என்ற கேள்வி தன்னாலேயே எழுகிறது. தேவகௌடாவுக்கு ராகுல் மரியாதை அளிக்காதது குறித்து குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு சித்தராமையா டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

எவ்வாறு மதிப்பளித்தீர்கள்
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் தேவகௌடாவுக்கு மரியாதை அளிப்பது தொடர்பாக மோடி அவர்களே நீங்கள் இலவச அறிவுரை வழங்கியுள்ளீர்கள். உங்கள் தலைவர் அத்வானிக்கும் 2014-ஆம் ஆண்டு தேவகௌடாவுக்கும் நீங்கள் எவ்வாறு மதிப்பளித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
|
சித்தராமையா சாடல்
உங்களுக்கு முன்னால் குனிந்து நிற்கும் 75 வயதுடைய மனிதருக்கு எப்படி மதிப்பளிக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பிய சித்தராமையா, சாம்ராஜநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட எடியூரப்பா, மோடியிடம் குனிந்து கொண்டு வணக்கம் செலுத்தும் படத்தையும் அதற்கு மோடி எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் சாதாரணமாக இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications