150 இடங்களில் வெல்வோம் என கூறிய எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிப்பு - சித்தராமையா

150 இடங்களில் வெல்வோம் என கூறிய எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று சித்தராமையா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பதவியேற்புக்கு இப்போதே நாள் குறித்த எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெல்வோம் என்று கூறியிருந்த எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    Siddaramaiah says that Yediyurappa has some mental problems

    மொத்தம் 222 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    அப்போது அவர் மேலும் பேசுகையில் கர்நாடகாவில் சித்தராமையா அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் கைபற்றும் என்று தெரிவித்தார்.

    வாக்களித்த பிறகு காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா கூறுகையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். எங்களுக்கே பெரும்பான்மை இடம் கிடைக்கும். 150 இடங்களில் வெல்வோம் என்று கூறிய எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றார் சித்தராமையா.

    பாஜகவின் ஸ்ரீராமுலு பெல்லாரியில் வாக்களித்தார். பதாமியில் சித்தராமையாவை எதிர்த்து ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+