Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யூடர்ன்".. 2 மணி நேரம் சமாதானம்.. ஃபார்முக்கு வந்த சித்து.. நிமிர்கிறது காங்கிரஸ்.. குழம்பும் பாஜக

தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்றார் சித்து

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கோபமாக இருந்த சித்துவை ஒருவழியாக சமாதானப்படுத்தி உள்ளனர்.. சித்து தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டதாகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

4 வருடங்களாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பஞ்சாப் மாநில அரசியலில் புதுபுது திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்றதுமே அதிருப்திகள் வெடித்தது.. அமரிந்தர் சிங் ஓபனாகவே சித்து மீது விமர்சனங்களை முன்வைத்தார்.. ஆனால் சித்து எதற்குமே அசரவில்லை. பதிலுக்கு பதில் அமரிந்தர் சிங்கை போட்டு தாக்கி கொண்டே இருந்தார்..

சமாதானம்

சமாதானம்

இரு தரப்பையும் காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சிகளை எடுத்தது.. ஆனால் எதுவுமே பலன் தரவில்லை.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த அமரிந்தர் சிங், இதுக்கு மேலயும் தன்னால் கட்சியில் அசிங்கப்பட முடியாது என்று கூறி கடந்த 20ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.. சரன்ஜித் முதல்வரானார்.. இனிமேலும் மாநில அரசியலில் பிரச்சனை வராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ராஜினாமா

ராஜினாமா

ஆனால், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதும், மறுபடியும் அதிருப்தி வெடித்தது.. புதிய காவல்துறை தலைவர், அட்வகேட் ஜெனரல் ஆகியோரை நியமித்தது சித்துவுக்கு பிடிக்கவில்லை.. இதனால், தன்னுடைய மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து.. இந்த அதிரடி நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை... இதனால் சித்து, டெல்லி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.. அப்போது, 18 அம்ச விஷயங்கள் குறித்து கோரிக்கையையும் அவர்களிடம் முன்வைத்தார்...

 ராகுல்காந்தி

ராகுல்காந்தி

பிறகு ராகுல் காந்தியை சித்து சந்தித்து பேசினார்.. 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.. அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்து, எனக்குள்ள பிரச்சனைகள், குறைகள் அனைத்தையும் ராகுலிடம் சொன்னேன்.. அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.. இதையடுத்து, சித்து தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டாதாகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

 பண்ணை வீடு

பண்ணை வீடு

இதனிடையே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. சரன்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கை அவருடைய பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்... இது ஓரளவு ஆறுதலை தந்துள்ளது.. ஒருபக்கம் சித்துவை சமாதானப்படுத்தி உள்ளனர்.. இன்னொரு பக்கம் உட்கட்சி பூசலில் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் சமாதான போக்கை கொண்டுள்ளனர்.. இதற்கு நடுவில், மாநில காங்கிரஸில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிக்கட்டும் முயற்சியும் நடந்து வருவதாக தெரிகிறது.

 அதிருப்திகள்

அதிருப்திகள்

ஆனால், இதையெல்லம் பாஜக பார்த்து மிரண்டு போயுள்ளது.. ஏற்கனவே அங்கு பாஜகவுக்கு அதிருப்திகள் உள்ளது.. விவசாயிகள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.. 3 வேளாண் மசோதாக்களால் பஞ்சாப், ஹரியானாவில் உள்ள விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.. இப்போதுவரை பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.. வரப்போகும் தேர்தலில் சீக்கியர்களின் வாக்கு பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது. அதனால், இவைகளை திரும்ப தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 விவசாயிகள்

விவசாயிகள்

அதேசமயம், தேர்தலில் ஓட்டுக்களை அள்ள சிறுபான்மையினர் சமுதாயத்தினர் மீது தன்னுடைய கவனத்தை பாஜக திருப்பி வருகிறது.. ஆனால், அதற்கும் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.. இதற்கு நடுவில் ஆம் ஆத்மி களத்தில் குதித்துள்ளது.. இது தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும், நடக்க போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

 கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

அதாவது மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 49 - 55 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 - 47 தொகுதிகளிலும், அகாலி தளம் 17 - 25 தொகுதிகளிலும் வெல்லக்கூடிய வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகின.. ஆனால் பாஜகவோ ஒரு தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்றும் செய்திகள் வந்தன. இதையடுத்து, பஞ்சாப்பை யார் வெல்வது என்ற போட்டிகள் அங்கு வலுப்பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+