ட்விஸ்ட்! மனோகர் பாரிக்கரின் மகனுக்கு.. சிவசேனா, ஆம் ஆத்மி என வரிசையாக ஆதரவு தரும் அரசியல் கட்சிகள்
கோவா: கோவா தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் போட்டியிடும் தொகுதியில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
நாட்டிலேயே சின்ன மாநிலமான கோவாவில் வரும் பிப். 14ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
மொத்தமே 40 சட்டசபை இடங்களை மட்டுமே கொண்ட கோவாவில், ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 21 இடங்களை ஒரு கட்சி கைப்பற்றி இருக்க வேண்டும்.

கோவா தேர்தல் களம்
இப்போது கோவாவில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா - என்சிபி கூட்டணி ஆகியவையும் களத்தில் உள்ளன. இருப்பினும், அங்கு உண்மையான போட்டி என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் நிலவுகிறது. இதனால் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உத்பால் பாரிக்கர்
கோவா மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலத்தில் பாஜக சார்பில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு அம்மாநில மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் அவரது மகன் உத்பால் பாரிக்கருக்கு பாஜக சார்பில் வாய்ப்பளிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் உத்பால் பாரிக்கருக்கு ஆதரவு அளித்தது. இருந்த போதிலும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக பனாஜி தொகுதியில் அவர் சுயேச்சையாகக் களமிறங்கினார்.

சிவசேனா
முன்னதாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி, உத்பால் பாரிக்கருக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை என்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி இப்போது பனாஜி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக ட்வீட் செய்துள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அங்கு உத்பால் பாரிக்கருக்கு முழு ஆரதவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார், மேலும், மறைந்த மனோகர் பாரிக்கரின் தொகுதியில் அவரது மகனுக்கு சீட் வழங்காமல் குற்றவியல் பின்னணி கொண்ட ஒருவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

உத்பால் பாரிக்கர்
பொறியாளரான உத்பால் பாரிக்கர், பனாஜியில் பாஜக வேட்பாளருக்கு எதிராகக் களமிறங்கி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். கோவாவில் அனைத்து தரப்பினரும் மதிக்கக் கூடிய ஒருவராக மனோகர் பாரிக்கர் இருந்தார். கோவாவில் அடிமட்டத்தில் இருந்து பாஜகவை வளர்த்த மனோகர் பாரிக்கர், 3 முறை கோவா முதல்வராக இருந்துள்ளார். மனோகர் பாரிக்கர் சுமார் 25 ஆண்டுகளாக பனாஜி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

2018 இடைத்தேர்தல்
கடந்த 2019இல் மனோகர் பாரிக்கர் மறைந்த பிறகு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் பாபுஷ் மான்செரேட் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் மீது ஏற்கனவே பாலியல் வன்புணர்வு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் வென்ற பிறகு அவர் பாஜகவில் ஐக்கியமானார். இப்போது உத்பால் பாரிக்கருக்கு பதிலாக பாபுஷ் மான்செரேட்டுக்கே பாஜக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. இதனால் தான் பனாஜி தொகுதியில் உத்பால் பாரிக்கர் தனித்துக் களமிறங்குகிறார். ஆம் ஆத்மி கட்சியும் இவருக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications