நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்
காங்டாக்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், நேற்று வெளியான சிக்கம் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

முன்னதாக நேற்றைய தினம் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரு மாநிலங்களின் சட்டசபை நேற்றுடன் நிறைவடைவதால் அங்கு முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அருணாச்சல பிரதேசம்: இதில் அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு 46 தொகுதிகளை பாஜக மொத்தமாகக் கைப்பற்றியது. அதேபோல சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது.
அதேநேரம் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்றும் 290 சீட்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருந்த நிலையில், இந்த படுதோல்வி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
எத்தனை தொகுதிகள்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட அருணாச்சல பிரதேசத்தில் 3 சீட்களில் வென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் வெறும் 5%ஆகச் சரிந்துள்ளது.
சிக்கிம்: ஆனால், இதை விட காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அதிர்ச்சி கொடுத்த மாநிலம் என்றால் அது சிக்கிம் தான். சிக்கம் மாநிலத்தில் மொத்தம் 32 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 31இல் ஆளும் கட்சியாக இருந்த எஸ்கேஎம் கட்சி க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பெற்றது. எஸ்டிஎப் என்ற மற்றொரு பிராந்திய கட்சி ஒரு சீட்டில் வென்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு தேசிய கட்சிகளாலும் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால், இதில் பெரிய ஷாக் காங்கிரஸ் கட்சிக்குத் தான். ஏனென்றால் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் சிக்கிமில் வெறும் 0.32% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது நோட்டாவை விடக் குறைவாகும். சிக்கிம் மாநிலத்தில் நோட்டாவுக்கு 0.99% வாக்குகள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அதை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.
நோட்டாவை விட குறைவு: குறிப்பாக காங்டாக் தொகுதியில் போட்டியிட்ட சம்மிட் டார்கோன் என்ற காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 44 வாக்குகளை மட்டுமே பெற்றார். மேலும் அரிதாங் தொகுதியில் போட்டியிட்ட சுமித்ரா ராய் வெறும் 46 வாக்குகளை மட்டுமே பெற்றார். இது அங்குப் பதிவான நோட்டா வாக்குகளை விடக் குறைவாகும். இப்படி மொத்தம் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டாவுக்கு கீழ் சென்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கிறது. குறிப்பாக 295 சீட்களில் வெல்வோம் என்று அக்கட்சியின் ராகுல் காந்தியும் நம்பிக்கையுடன் கூறி வரும் நிலையில், இது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications