நாட்டின் முதல் “ஆர்கானிக்” வேளாண்மை மாநிலமாக சிக்கிம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
கேங்டாக்: இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலமாக "பூக்களின் தேசம்" சிக்கிம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணுக்கும், உடலுக்கும் கேடுவிளைவிக்கும் வேதி உரங்களை பயன்படுத்தாமல் முற்றிலுமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டும் செய்யப்படுவது உயிர்ம வேளாண்மை ஆகும்.
6 லட்சம் மக்களையும் 75 ஆயிரம் ஹெக்டேர் வேளாண்மை நிலத்தைக் கொண்ட சிக்கிம் மாநிலம் முற்றிலும் உயிர்ம வேளாண்மைக்கு மாறும் முடிவை கடந்த 2003 ஆம் ஆண்டில் எடுத்தது.

வேதி உரங்களுக்கு தடை:
ஆனால் அந்த முடிவிற்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. வேதி உரங்களுக்கு தடை விதித்தது உட்பட பல்வேறு நடவடிகைகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் முழுமையாக உயிர்ம வேளாண்மையில் ஈடுப்படும் மாநிலம் என்ற அதிகாரபூர்வ தரச் சான்றிதழை சிக்கிம் பெற்றது.

முறையான அறிவிப்பு:
ஆனாலும் பிரதமர் மோடியின் நேற்றைய பயணத்தின் போதுதான் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிக்கிம் மாநிலமும் உயிர்ம வேளாண்மை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

80 மில்லியன் டன் பொருட்கள்:
இந்தியாவில் ஆண்டுக்கு 1.24 மில்லியன் டன் உயிர்ம வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்கிறது.

உயிர்தரும் உயிர்ம வேளாண்மை:
சிக்கிமை போலவே கேரளா, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் உயிர்ம வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications