சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது எஸ்கேஎம்! 32 தொகுதிகளில் 31ஐ கைப்பற்றியது!
கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில், சிக்கிம்மை மீண்டும் எஸ்கேஎம் வெற்றி கொண்டு தக்க வைத்துக்கொண்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, லோக்சபா தேர்தல் முடிவுறுகிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
லோக்சபா தேர்தலுக்கு இடையில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி சிக்கிம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் தேதி மாற்றப்பட்டு ஜூன் 2ம் தேி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் சிக்கிம் மாநில அரசின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால்தான் இன்று வாக்கை எண்ண திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் ஆளும் எஸ்கேஎம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றிருக்கிறது.
முடிவின்படி, முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி, 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎஃப்) ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications