10 லட்சம் பேர் தேர்வெழுதவில்லை.. கேள்வியை ஈசியா கேளுங்க என ஐடியா கொடுத்த யோகி ஆதித்யநாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: தினம் ஒரு சரவெடி, காமெடி அதிரடி என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வித்தியாசமாக எதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவர் காவி சம்பந்தமாக பேசும் எல்லா விஷயங்களும் ஆல் இந்தியா வைரல் ரகம்.

காவி எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பசுமாடும் பிடிக்கும். பசுக்களை பாதுகாக்க இவர் சொல்லும் திட்டங்கள் எல்லாம் வயிற்றை கலங்க வைக்கும் ஒன்று.

இந்தநிலையில் இவர் மாணவர்களின் கல்வி குறித்து பேசியுள்ளார். தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்கவில்லை என்றால் யாரும் தேர்வு எழுத மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

உபியில் தற்போது பள்ளி இறுதி ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் பேர் எழுதவில்லை. இதில் 10 மற்றும் 12வதுவகுப்பு பொதுத்தேர்வும் அடக்கம்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு யோகி ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அதில் ''மாணவர்களுக்கு கஷ்டமாக கேள்வி கேட்டால் இப்படித்தான் செய்வார்கள். அவர்களுக்கு இனி எளிதாக கேள்வி கேளுங்கள். அவர்களை தேர்வு அறைக்கு கொண்டு வாருங்கள்'' என்றுள்ளார்.

வேற லெவல் காரணம்

வேற லெவல் காரணம்

அதோடு நிற்காமல் ''தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடாமல் நிறைய விதிமுறைகள் இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறார்கள். இதனால்தான் இந்த முறை 10 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை'' என்றுள்ளார்.

கிண்டல்

யோகியின் இந்த பேச்சை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். வாவ் யோகி இப்படித்தான் பேச வேண்டும் என்று இவர் கிண்டல் செய்து இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10 lakhs students recent didn't attent UP state board exam. So Yogi says about UP School exams that they shoul simplify the exam, student will attend it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற