5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 5 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனியார் உணவு விடுதிக்கு பேருந்து மூலம் லீ உள்ளிட்டோர் சென்றடைந்தனர்.

லீ சியான் தனது பயணத்தின் போது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதே அவரது இந்தப் பயணத்தின் நோக்கம் ஆகும். பிரதமர் லீ சியான் லூவுடன் அவரது மனைவி ஹோ ச்சிங் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளும் உடன் வந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, லீ சியான் லூங் இரு தலைவர்களும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications