தொடங்கியது போர்? ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீர் ட்ரோன் தாக்குதல்.. இந்தியா தக்க பதிலடி
ஜம்மு காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ள நிலையில் இன்று இரவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலை எச்சரிக்கும் சைரன்கள் அலறுவதால் பொதுமக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய நிலையில் அந்த ட்ரோன்களை இடைமறித்து நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு அழித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே அறிவிக்கப்படாத போர் என்பது தொடங்கி விட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் சற்று நேரத்துக்கு முன்பாக பாகிஸ்தான் சார்பில் ஜம்மு காஷ்மீரில் ட்ரோன் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் இன்று திடீரென்று சைரன்கள் ஒலிக்க தொடங்கின.

இந்த சைரன்கள் என்பது எதிரி நாடுகளின் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்போது ஒலிக்க விடப்படும். இந்த சத்தத்தை கேட்டவுடன் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியபடி வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகின. அதில் அக்னூர் பகுதியில் சைரன்கள் ஒலிக்கின்றன. வானில் சிவப்பு நிற ஒளியுடன் ட்ரோன்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. இதன்மூலம் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதலை தொடங்கியது தெரியவந்தது. மேலும் அந்த பகுதி மக்களும் ட்ரோன்களை கண்களால் பார்த்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் செயல்பட தொடங்கி பாகிஸ்தானின் ட்ரோன்களை வானில் இடைமறித்து அழித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் சார்பில் தொடர்ந்து ட்ரோன்கள் வருகின்றன. அதனை அழிக்கும் பணியில் நம் வான் பாதுகாப்பு சிஸ்டம் இயங்கி வருகிறது. சில இடங்களில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் என்பது தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பஹல்காமில் தாக்குதலுக்கு நேற்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று இரவு, இன்று காலை வேளைகளில் பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் நம்மை தாக்கலாம். இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது பாகிஸ்தான் நம் நாட்டின் மீது ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் என்பது இருநாடுகள் இடையே அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications