3 மகள், ஒரு மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை - பெங்களூருவில் பரிதாபம்
பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, மைசூரு ரோடு பகுதியிலுள்ள நாகரபாவி-எம்.பி.எம். லே அவுட்டைச் சேர்ந்தவர் கங்கா ஹனுமைய்யா (57) . பி.எஸ்.என்.எல். ஊழியரான இவரது மனைவி பெயர் ஜெயலக்ஷம்மா (54 ). இத்தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன்.

இவர்களில் மூத்த மகள் ஹேமலதா (30) பொறியாளராகவும், இரண்டாவது மகள் விமலா (28) ரயில்வேயிலும் பணி புரிந்து வந்தனர். மூன்றாவது மகன் யாதிஷ் (26) வேலை தேடிக் கொண்டிருந்தார். கடைசி மகள் நேத்ராவதி (24) பொறியியல் கல்லூரி மாணவி.

இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் ஆள் நடமாட்டமே இல்லாது இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் சந்தேகமடைந்தனர். திறந்திருந்த ஜன்னல் வழியே வீட்டிற்குள் பார்த்த போது, ஒருவர் தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, வீட்டில் உள்ள அனைவருமே தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகம் நிலவுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications