சத்தீஸ்கரில் ராணுவத்தினர் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்... 6 பேர் படுகாயம்
தண்டேவாடா:சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் ராணுவத்தினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் சாலை மார்க்கமாக சிஆர்பிஎப் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் மாநில போலீசாரும் உடன் சென்றனர்.

அப்போது, மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை நோக்கி திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நடைபெற்றது.
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடடினயாக அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளின் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். தாக்குதலை தொடர்ந்து தண்டேவாடா பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications