அணைக்காமல் விட்ட மெழுகுவர்த்தியால் தீ விபத்து.. வீடு இடிந்தது... 6 சிறுமிகள் பலி
பரேலி: உத்தரப்பிரதேசத்தில் இரவில் அணைக்காமல் விடப்பட்ட மெழுகுவர்த்தியால், வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் குயிலா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்டது கண்டோன்மெண்ட் பகுதி. இங்குள்ள காலிதாம் கோவில் அருகே வீடொன்றில், நான்கு சகோதரிகளும், அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் இருவரும் தங்கி இருந்தனர்.

இவர்களது பெற்றோர் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால், சிறுமிகள் மட்டும் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது, இரவு உறங்கச் செல்வதற்கு முன்னால் மெழுகுவர்த்தியை அணைக்க சிறுமிகள் மறந்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், அதில் இருந்து பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தைக் கண்டு அக்கம்பக்கத்தார் அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க அவர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில், வீட்டில் இருந்த ஆறு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சகோதரிகள் சலோனி (வயது 17), சஞ்சனா (15), பூரி (10), துர்கா (8) என்றும் அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் மகிமா (9) மற்றும் தபு (7) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் பலியான இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications