சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 6 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை- போலீஸ் அதிரடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 நக்சலைட்டுகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டுவீழ்த்தினர்.
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாட வனப்பகுதியில் பதுங்கியிருந்த 6 நக்சலைட்டுகளை அம்மாநில போலீசார் சுட்டுவீழ்த்தினர்.
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாட வனப்பகுதியில், நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து கொண்ட பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்சிச் சூடு நடத்தினர். இதையடுத்து, போலீசார் தங்கள் தரப்பில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், 6 நக்ஸ்லைட்டுகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications