மழைக்காக கிரிக்கெட் மைதானத்தில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கியது - 6 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
புவனேஷ்வர்: ஒடிசாவில் மழைக்காக கிரிக்கெட் மைதானத்தில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலத்தின் கோர்தா மாவட்டத்தில் உள்ள ஜாரிபதா கிராமத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் சிலர் ஒதுங்கி நின்றனர்.
அப்போது அந்தக் கிரிக்கெட் மைதானத்தை பலத்த இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானார்கள். மேலும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட 14 பேரில், சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
இறந்த அனைவரும் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications