சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்.. பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் 8 காவலர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 4-ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தண்டேவாடா மாவட்டம், சோல்னாரில் இருந்து கிரந்துல் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனத்தில், மாநில காவல் துறையைச் சேர்ந்த 10 பேரும் உடன்சென்றனர்.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் வாகனம் செல்லும் பாதையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர்.
இதில் 6 காவலர்களும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், போலம்பள்ளி அருகே மாவோயிஸ்டுகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்டனர்.
இதேபோல், ஞாயிற்றுக்கிழமை கான்கெர் மாவட்டத்தில், சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த 17 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கான்கெர் மாவட்டம் சோடே பைதியா பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் தலைமைக் காவலர் உயிரிழந்தார். மாவோயிஸ்டுகளின் தொடர் தாக்குதலால் சத்தீஸ்கரில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. நிலைமை குறித்து எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் டி.கே.பதக் ஆய்வு செய்து வருகிறார்.
உயிரிழந்த வீரர்களுக்கு விருது: ராஜ்நாத் சிங்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினருக்கு 'வீரச் செயல்' விருது வழங்கப்படும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு போதிய உதவிகள் செய்யப்படும்," என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications