காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட 3 திருநங்கை ஜோடிகள்
டெல்லி: டெல்லியில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 6 பேர் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.
காதலர் தினத்தனற்கு டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 6 பேருக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக்காக பாடுபடம் ஸ்பேஸ் என்ற என்ஜிஓ அமைப்பு திருமணம் நடத்தி வைத்தது.

திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் ஒன்றான அலி மிர்சா, ஜனஷீன் கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்துள்ளனர். அலி பர்னிச்சர் கடை வைத்துள்ளார். ஜனஷீன் மாடலாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு பார்ட்டியில் சந்தித்த அவர்கள் நண்பர்களாகி பின்னர் காதலர்களாகியுள்ளனர். இந்த உறவுக்கு அலியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அலி தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இது குறித்து அலி கூறுகையில்,
நாங்களும் பிற தம்பதிகளை போன்று வாழ விரும்புகிறோம். ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மற்றொரு ஜோடியான அஜய் சர்மா, பாயலின் காதல் கண்டதும் காதல் ஆகும். டெல்லியைச் சேர்ந்த அஜய் காஷ்மீரைச் சேர்ந்த பாயலை பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டார்.












Click it and Unblock the Notifications