6 ஆண்டுகால வலிகளுக்குப் பின்னர் மும்பை நாரிமன் ஹவுஸ் மீண்டும் இன்று திறப்பு!
மும்பை: மும்பையில் கடந்த 2008 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய நாரிமன் ஹவுஸ் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. இதில் இன்று 25 யூத குருமார்கள் பங்கேற்று ஆசி வழங்கினர்.
நவம்பர் 2008 இல் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் நான்கு நாட்கள் சிக்கித்தவித்த இப்பகுதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
26/11/2008 என்றால் நினைவுக்கு வரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கசாப் மட்டும் பிடிபட்டு தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டு விட்டது. 9 பேர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து வழிநடத்திய முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட யூதர்கள் வசித்து வந்த நாரிமன் ஹவுசில் 6 பேர் இறந்தனர். தாயை இழந்த 2 வயது குழந்தை மோசி மீண்டும் அவர்களின் சொந்த நாடான இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த குழந்தைக்கு வயது 6. இவர் அரசு தரப்பின் கவனத்தில் வளர்க்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நாரிமன் ஹவுஸ் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யூத குருமார்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நாரிமன் ஹவுசில் சில பகுதிகள் மியூஸியமாக மாற்றப்படும் என இதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications