டெல்லியில் இரவில் நாய்களுடன் காரில் ஜாலிரைட் போன ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

Smitten by Rahul's dogs & dimples, animal lovers pledge vote
டெல்லி: தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இரவு நேரத்தில் பாதுகாவலர்கள் இன்றி கார் ஓட்டிச் சென்றுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவர் எங்கு சென்றாலும் பாதுகாவலர்கள் உடன் செல்கிறார்கள். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சிக்னலில் ஒரு கார் நின்றுள்ளது. அப்போது தனது தோழியுடன் அந்த வழியாக சென்ற பெண் காரில் ராகுல் காந்தி இருப்பதை பார்த்துள்ளார்.

ராகுல் விலங்குகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் அப்பெண்ணிடம் காரில் இருந்த தனது 4 நாய்கள் குறித்து பேசியுள்ளார். காரில் ராகுல் தத்தெடுத்த நான்கு தெரு நாய்கள் இருந்துள்ளன. ராகுலே காரை ஓட்டியுள்ளார். அவருடன் பாதுகாவலர்கள் யாரும் வரவில்லை.

பின்னர் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் அவர் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில்.

நான் நாய்களை பார்த்தேன். உடனே ராகுலுடன் பேசினேன். அப்பொழுது இருட்டாக இருந்தது. அவர் என்ன காரில் வந்தார் என்று தெரியவில்லை. அவரது காரில் இருந்தது தத்தெடுக்கப்பட்ட தெருநாய்கள் என்றார்.

இந்த தகவலை அப்பெண் ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். அதைப் பார்த்த ஒருவர் தானும் ஒரு நாள் ராகுல் தனது வளர்ப்பு நாய்களுடன் காரில் சென்றதை பார்த்தாக தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுலின் செய்தியை படித்த விலங்கு பிரியர்கள் தங்கள் வாக்கு ராகுலுக்கே என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+