குப் குப்.. "தம்" அடிக்கும் பெண் யானை.. வைரலாக பரவும் வீடியோ
காட்டு யானை ஒன்று புகை விடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் யானை ஒன்று கரித்துண்டுகளை சாப்பிட்டு விட்டு, புகையை உமிழும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் நாகர்ஹோல் காட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளின் தடத்தை ஆய்வு செய்யும் பணியில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று மரத்தின் கீழ் நின்று புகையை உமிழ்ந்து கொண்டிருக்கும் விசித்திரக் காட்சியை அவர்கள் கண்டனர்.

அந்தப் பெண் யானை நின்று கொண்டிருந்த இடத்தின் அருகில் இருந்த மரம் தீப்பிடித்து அணைந்திருந்தது. இதனால் அம்மரம் அருகே மரக் கரித்துண்டுகள் சிதறிக் கிடந்தன. அந்தத் துண்டுகளை துப்பிக்கையால் எடுத்து சாப்பிட்டுக் கொண்டு தான், அந்த யானை புகையை உமிழ்ந்து கொண்டிருந்தது.
இந்தக் காட்சிகளை ஆய்வில் ஈடுபட்டிருந்த அந்த அமைப்பின் உதவி இயக்குநர் வினய் குமார் தனது செல்போனில் பதிவு செய்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் கடந்த வாரம் இந்த வீடியோவை வினய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
முதலில் யானை புகைப் பிடிக்கிறது என அதனைப் பார்த்தவர்கள் ஜாலியாக எடுத்துக் கொண்டனர். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த காட்டுயானை குறித்த ஆராய்ச்சியாளர்களுக்கோ பயங்கரக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதற்காக யானை கரித்துண்டுகளை சாப்பிட்டது என்பது இன்னும் அவர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.
கரித்துண்டுகளில் நச்சுத் தன்மை உள்ள போதும், விலங்குகளின் செரிமானத்தை அதிகரிக்கும் திறனும் அதில் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, அதில் இருக்கும் ஒரு சில மருத்துவத் தன்மைகளால் ஈர்க்கப்பட்டு யானை அவற்றை சாப்பிட்டிருக்கலாம் என்பது அவர்களது கணிப்பு. தொடர்ந்து இது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு, இன்றும் கிராமப்புறங்களில் பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்சினைகளுக்கு கரித்துண்டை நிவாரணியாக பயன்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் வீடியோவில் உள்ள காட்டு யானையும், தன் பல் அல்லது ஈறு தொடர்பான பிரச்சினைக்கு மருந்தாகக்கூட இந்தக் கரித்துண்டுகளை சாப்பிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கருத்தால், 48 விநாடிகள் உள்ள யானை புகைப்பிடிக்கும் வீடியோ காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications