வாழ்க்கையும், வாழ்வதும் அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்.. இவரோட கதையைக் கேளுங்க!
டெல்லி: வாழ்க்கை சிலருக்கு அழகானது. சிலருக்கு சுலபமானது.. பலருக்கோ கடினமானது. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் கடத்துவதற்குப் படும் பாடுகளும், சிரமங்களும் எழுத்தில் வடிக்க முடியாது. எழுதுவதற்கு எழுத்துகளும் போதாது. இதோ இவர் அதற்கு சரியான உதாரணம்.
இவரது பெயர் இக்பால் ஜோகி. 30 வயதாகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர் பாம்புகளை வைத்து சாகசம் செய்து பிழைப்பை ஓட்டுகிறார். இவர் பாம்பை வைத்து செய்வது வேண்டுமானால் சாகசமாக இருக்கலாம்.
ஆனால் இவருக்குப் பின்னால் எட்டு குழந்தைகள் பசியோடும், எதிர்பார்ப்போடும் காத்துள்ளனர். அத்தனை பேருக்கும் இவர்தான் ஒரே வாழ்வாதாரம்.

மூக்கு வழியாக விட்டு...
உயிருடன் உள்ள பாம்பை தனது மூக்கு வழியாக விட்டு வாய் வழியாக கொண்டு வந்து சாகசம் செய்து மக்களை குஷிப்படுத்துகிறார் இக்பால். பள்ளிகள், மக்கள் கூடும் இடங்கள், கல்யாணக் கூடங்களில் இவரை அதிகம் காண முடியும்.

12 வருடமாக...
கராச்சி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு 5 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த 12 வருடமாக இந்த பாம்பு வித்தையை இவர் செய்து வருகிறார். பாரம்பரிய உடையில் இவர் பாம்புடன் பல மைல் தூரம் தினசரி நடந்து போய் வித்தை காட்டி சம்பாதிக்கிறார்.

பயமில்லை...
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பாம்பாட்டி குடும்பத்தசை் சேர்ந்தவன். எனவே சிறு வயதிலிருந்தே பாம்பு என்றால் எனக்குப் பயம் கிடையாது. இதை எல்லோரும் செய்ய முடியாது. என்னால் முடிகிறது என்பதை நான் ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்.

பெருமை...
எனது திறமையைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இதுதான் எனது வாழ்வாதாரமும் கூட.. இது ரிஸ்க்தான். இருந்தாலும் எனது குடும்பத்துக்காக இதை நான் செய்கிறேன்.

மகிழ்ச்சி...
நான் மூக்கு வழியாக உள்ளே விடும் பாம்பு என்னாகுமோ என்று கூட்டத்தினர் பயப்படுவார்கள். ஆனால் அது பத்திரமாக உயிருடன் வாய் வழியாக வருவதைப் பார்த்து குஷிப்படுவார்கள். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியுமாகும்" என்கிறார் இக்பால்.

விஷப்பாம்பு...
ஒருமுறை விஷப் பாம்பு இவரது கையைக் கடித்து விட்டதாம். உடனே மயக்கமாகி விட்ட இவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு 3 நாட்கள் நினைவில்லாமல் உயிருக்குப் போராடி பின்னர் மீண்டாராம் அவர்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications