Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் அள்ள அள்ள வந்த சடலங்கள்.. உடைந்து போன மீட்பு படையினர்.. ஒடிசாவில் அதிகாலையில் கண்ட காட்சி!

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்து கொண்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.

விபத்து காரணம்?: இதில் முதலில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் ஏன் தடம் புரண்டது என்று தெரியவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.

So many bodies came out of the trains, Shocking early morning scenes in Odisha

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.

மாறாக ஒரு ரயில் தடம் புரண்டதால் இன்னொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் 250 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புக்கிங்:கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.

இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.அங்கே இரவு முழுக்க அள்ள அள்ள உடல்கள் வந்துள்ளன.

அதிகாலையில் அங்கே ரயில்கள் ஒன்றின் மேல் ஒன்று இருந்த காட்சியை பார்த்து மீட்பு படையினர், மக்கள் உடைந்து போய் உள்ளனர். தமிழ்நாடு நோக்கி வரும் ரயில் என்பதால் இதில் பல தமிழர்கள் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் ஒடிசா நோக்கி தமிழக அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர். அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழக அதிகாரிகள் குழு ஒடிசாவுக்கு விரைந்து உள்ளது.

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

So many bodies came out of the trains, Shocking early morning scenes in Odisha

விபத்து நடந்தது எப்படி? : அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+