ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் சமூக ஆர்வலர் மேதா பட்கர்!
டெல்லி: சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் பல பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். அக்கட்சியும் பிரமுகர்களை இணைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த வரிசையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு பெற்ற சமூக ஆர்வலர் மேதா பட்கரையும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் சந்தித்து கட்சியில் இணைய வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மேதா பட்கர், நாட்டில் புதிய அரசியல் அலை உருவாகியுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். நர்மதா அணை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். இதனால் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications