Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென நிறம் மாறும் இந்திய புலிகள்.. கருப்பு நிறத்தில் பார்க்கவே வினோதமாக-விஞ்ஞானிகள் உடைத்த மர்மம்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகள் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய காலகட்டங்களில் கருப்பு நிறத்தில் மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் விஞ்ஞானிகள் இதன் பின் இருக்கும் மர்மத்தை உடைத்து உள்ளனர்.

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வகையான புலி இனங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில்தான் இந்திய புலி வகைகளில் ஒன்றான ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகளில் உடலில் நிறம் மாற தொடங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புலிகள் சாதராண இளம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாற தொடங்கி உள்ளது.

என்ன நடக்கிறது?

என்ன நடக்கிறது?

2017, 2018 மற்றும் 2019ல் இருந்து அந்த புலிகளின் உடல்களில் இந்த நிற மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 50 முதல் 60 வருடங்களுக்கு முன்பே ஒடிசாவில் சிமிலிபால் பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் புலிகள் நிறம் மாறுவதாக குறிப்பிட்டு வந்தனர். ஆனால் அதை முதலில் புலிகளை ஆராய்ச்சி செய்யும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நம்பவில்லை.

உண்மை

உண்மை

ஆனால் கடந்த 3 வருடமாக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்கூடாக பார்த்து புலிகளில் ஏற்படும் நிற மாற்றத்தை உறுதி செய்துள்ளனர். புலிகளின் தோலில் இருக்கும் வரிகள் இணைந்து கருப்பு நிறம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தோலில் இடைவெளிவிட்டு வரிகள் இருக்கும். பெரும்பாலும் தங்க நிறத்தில் அல்லது லேசான கருப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறங்களில் இந்த வரிகள் இருக்கும்.

காரணம்?

காரணம்?

ஆனால் சமீபமாக சில புலிகளில் அங்கு அடர் கருப்பு நிறத்தில் வரிகள் தோன்றுகின்றன. அதோடு இந்த வரிகள் இடைவெளி இன்றி பெரிதாக தோன்றி ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகிறது. இதனால் புலிகளின் உடலில் வரிகளுக்கு பதிலாக கருப்பு பட்டைகள் பெரிதாக ஏற்பட்டு, புலிகளின் நிறம் கருப்பாக மாறிவிடுகிறது. இதனால் அந்த புலிகள் மிகவும் வினோதமாக காட்சி அளிக்கின்றன. புலிகளின் உடலில் ஏற்பட்ட ஜீன் மாற்றம்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

புலிகளின் உடலில் டிரான்ஸ்மெம்பரீன் அமினோபெப்டிடாஸ் க்யூ அல்லது டாக்பெப் ஆகியவற்றில் ஏற்பட்ட ஜீன் உருமாற்றம் காரணமாக இந்த வரிகள் மாற்றம் ஏற்பட்டு, அது புலிகளுக்கு புதிய நிறத்தை கொடுத்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஜீனில் உள்ள டிஎன்ஏ வரிசையில் சைட்டோசின் உருமாற்றம் அடைந்து தைமினாக வரிசை எண் 1360ல் மாற்றம் அடைந்துள்ளது. அல்லது Taqpep p.H454Y என்ற உருமாற்றம் பெற்றுள்ளது. கொரோனா உருமாறுகிறதே அதேபோல்தான் இதன் ஜீனிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதன் வரிகள் மாற்றம் அடைந்து நிறம் மாறி உள்ளது.

சோதனை

சோதனை

தேசிய அறிவியல் அகாடமியில் டாக்டர் உமா ராமக்ரிஷ்ணன் என்பவரின் ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. புலிகளின் உடலில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவே இல்லை. சில பூனை வகைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்தியாவில் சில புலிகளிலும் ஏற்பட தொடங்கி உள்ளது. இதற்கு முன் பழங்குடிகளின் கதைகளில் மட்டுமே இது போன்ற தகவல்கள் இருந்தன. ஆனால் அது தற்போது உண்மையாக 2017, 2018களில் நடந்துள்ளது வியப்பளிப்பதாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+