ஆப்பிரிக்க பெண்களை அவமானப்படுத்திய விவகாரம்: டெல்லி சட்ட அமைச்சர், ஆதரவாளர்கள் மீது வழக்கு

டெல்லி மால்வியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி. அவர் தான் டெல்லியின் சட்ட அமைச்சராக உள்ளார்.
அவர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை இரவு கிர்கி எக்ஸ்டென்ஷனுக்கு சென்று உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் என்று மொத்தம் 4 ஆப்பிரிக்க பெண்களை பிடித்து அவர்கள் விபச்சராம் செய்வதுடன் போதைப் பொருள் விற்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கி, அசிங்கமாக பேசினர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எங்களை வலுக்கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தினர். கழிவறையை பயன்படுத்த அனுமதித்தால் நாங்கள் தப்பிவிடுவோம் என்று அமைச்சரின் ஆட்கள் கூறினர். இதனால் பொது இடத்தில் எங்களை சிறுநீர் கழிக்கச் செய்தனர் என்றனர்.
இந்த விவகாரம் குறித்து உடனே வழக்குப் பதிவு செய்யுமாறு சகேத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதையடுத்து சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பெண்களிடம் அத்துமீறியது, இரண்டு அமைப்புகள் அல்லது மதங்களுக்கு இடையே விரோதத்தை தூண்டிவிடுவது, கலகம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications