2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்
டெல்லி: இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.
உத்திரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் கடந்த 2-ஆம் தேதி காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற சோனியா காந்திக்கு காய்ச்சலும், இடது தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது. திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்த சோனியா காந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதற்கட்ட பரிசோதனைக்குப் பின்னர் அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சுமார் 11 நாள்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சோனியாகாந்திக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் தேறிய அவர், வீடு திரும்பினார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை குறித்து பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அவர் சென்றார். அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சோனியா காந்தி, இன்று வீடு திரும்பினார்.
அடுத்த முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்வரை அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications