பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசம்: சோனியா கடும் சாடல்

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இன்று மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்றார்.
அப்போது பேசிய சோனியா காந்தி, இதே பஸ்தார் பகுதியில் மே 25-ந் தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் உயிருடன் இல்லாதது பெரும் கவலை அளிக்கிறது.
பாரதிய ஜனதா ஆளும் இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததன் விளைவே இது. மாவோயிஸ்டுகளை ஒடுக்க, அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்தும் சத்தீஸ்கர் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் சரியான சாலைவசதியைக் கூட சத்தீஸ்கர் மாநில அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் வளர்ச்சியை நேசிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ நாட்டில் சகோதரர்களாக வாழும் மக்களை பிரிக்கிறது. இவர்களின் சதிவலையில் மக்கள் சிக்கிவிடக்கூடாது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications