உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலையளிக்கிறது.... சோனியா காந்தி
டெல்லி: பதான்கோட் தாக்குதல் சம்பவத்தையடுத்து , உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலையளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதான்கோட்டில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் வீரத்துக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பதான்கோட் விமானப்படை தளத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுடன் 48 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. இது போன்ற சம்பவங்களால், நாட்டு மக்களின் பாதுகாப்பும், விமானப் படை தளங்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை அளிக்கிறது.

இது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து உளவு அமைப்புகள் கொடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்த்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பதான்கோட்டில் கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி கர்நாடகாவில் யோகா குறித்து பிரசாரம் செய்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்து விட்டதையே காட்டுகிறது. இந்த சம்பவத்தில் பாக்கிஸ்தானின் பங்கு குறித்து மத்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications