சோனியா தலைமையில் மன்மோகனுக்கு ‘ஃபேர்வெல்’ பார்ட்டி!
டெல்லி: மன்மோகன் சிங்கிற்கான பிரிவு உபச்சார விழா விருந்திற்கு வரும் 14-ந் தேதியன்று ஏற்பாடு செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து வருகிறது. நாளை கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன. அன்று அல்லது அதற்கு மறுநாள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.
இதனால், வரும் 14ம் தேதி காங்கிரஸ் கட்சிச் சார்பில் மன்மோகன் சிங்கிற்கு பிரிவு உபச்சார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில், மன்மோகன் சிங்கிற்கு நினைவுக் கேடயம் வழங்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அன்று மாலை மன்மோகன் சிங், தொலைக்காட்சி வாயிலாக தனது பிரிவு உரையை மக்களிடம் ஆற்ற இருக்கிறார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications