19ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும் சோனியா, ராகுல்.. டெல்லியில் குவியும் காங்கிரஸார்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வரும் சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
முன்னாள் பிரதமர் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை முறைகேடாக கைப்பற்றியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதையடுத்து வரும் சனிக்கிழமை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்கள்.. அவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகிறார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்கப் போவதில்லை என்றும் தேவைப்பட்டால் அவர்கள் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அன்றைய தினம், காங்கிரஸ் முதல்வர்கள், மாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் பெறலாம். அதே நேரம் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், நீதிமன்றம் அவர்களை சிறைக்கும் அனுப்பலாம்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications