ராகுலை வைத்து நாடகம் போடும் சோனியா: அத்வானி
டெல்லி: கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்தை எதிர்க்குமாறு ராகுலுக்கு ஆலோசனை சொன்னதே சோனியா தான். இதன் மூலம் பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
குற்ற வழக்குகளில் இரண்டாண்டு தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கலாம் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை முடக்கும் வகையில் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எதிர்த்து பேட்டியளித்தார். அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்றும் அதை கிழித்து எறியவேண்டும் என்று கடும் சொற்களை பயன்படுத்தினார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் பதவி விலகவேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றது.
அவரச சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, பின்னர் திரும்ப பெறப்பட்டது போன்ற பஞ்சாயத்துக்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது டுவீட்டரில் கருத்து கூறியுள்ளார்.
சோனியாவின் ஆலோசனை
அவசர சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்குமாறு ராகுலுக்கு ஆலோசனை கூறியதே சோனியா தான். நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என வலியுறுத்திய பிறகு தான், சோனியா, ராகுலை வைத்து அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி அமைச்சரவை , அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய போது, தனது எதிர்ப்பை காட்டாத ராகுல், திடீரென அவசர சட்டம் ஒரு ‘நான்சென்ஸ்' என கருத்து தெரிவித்தது ஏன்?
ஜனாதிபதியும் காரணம்
இதன் மூலம் ராகுல் பிரதமரை மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும் அவமதித்துவிட்டார். ராகுல் செயல்பாட்டில் சோனியாவிற்கும் பங்குண்டு. இச்சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு ஜனாதிபதியும் ஒரு காரணம் என்றும் அத்வானி கருத்து கூறியுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications