காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க கோரி சபாநாயகருக்கு சோனியா கடிதம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டு மக்கள் தனி ஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் தேசிய அளவில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருப்பதற்கான அந்தஸ்தை பெறுவதற்கு தேவையான பலத்தை மக்கள் தரவில்லை.

காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளிலே வெற்றி பெற்றது. எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோரும் கட்சிக்கு மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். உரிமை கோரும் கட்சிக்கு 54 உறுப்பினர்கள் பலம் இருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் காங்கிரசுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
எதிர்கட்சி தலைவர் பெற எந்த கட்சிக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லாததை தொடர்ந்து அந்த பதவியை காலியாக வைத்திருக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே இது தொடர்பாக பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு இது குறித்து முடிவு எடுப்பது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 10 சதவீத உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும் என்ற விதி பொருந்தாது என்று சோனியா தனது கடித்ததில் கூறியுள்ளார்.
அதிக எம்.பி.களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications