சாரி ஷிவ்டே.. காதலியை சமாதானம் செய்ய புனே முழுக்க கட் அவுட் வைத்த இளைஞர்.. கடைசியில் கைது!
புனேவில் தன்னுடைய காதலியிடம் மன்னிப்பு கேட்பதற்காக நகரம் முழுக்க பிளக்ஸ் ஒட்டியவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

புனே: புனேவில் தன்னுடைய காதலியிடம் மன்னிப்பு கேட்பதற்காக நகரம் முழுக்க பிளக்ஸ் ஒட்டியவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
காதல் வந்தால் மனிதர்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். காதலியோடு சண்டை என்றால் உலகத்தையே மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்வுதான் புனேவில் நடந்துள்ளது.
புனேவை சேர்ந்த நிலேஷ் கடேக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காதலியிடம் மன்னிப்பு கேட்க நகரம் முழுக்க கட் அவுட் ஒட்டியுள்ளார். இது அவரின் காதலியை கவர்ந்ததோ இல்லையோ போலீசை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

காதலியுடன் சண்டை
நிலேஷ் கடேக்கர் கடந்த நான்கு வருடமாக, ஷிவ்டே என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற வாரம் அந்த பெண்ணுடன் இவருக்கு சண்டை வந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லையாம். இதுதான் இந்த கட் அவுட் சர்ச்சைக்கு காரணம்.

வித்தியாசமான ஐடியா
தன்னுடைய காதலியை சமாதானப்படுத்த தன்னுடைய நண்பர்களிடம் ஐடியா கேட்டுள்ளார். தன்னை சந்தானமாக பாவித்துக் கொண்ட நண்பர்கள் இந்த கட் அவுட் வைக்கும் ஐடியாவை கொடுத்துள்ளனர். இதனால் புனே முழுக்க கட் அவுட் வைக்க 500 பிளக்ஸ் ஆர்டர் கொடுத்துள்ளார்.

செலவு
சாரி ஷிவ்டே , லவ் யூ ஷிவ்டே என்று புனே முழுக்க இப்படி பிளக்ஸ் வைத்துள்ளார். முக்கியமாக அந்த பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலும், தினமும் சென்று வரும் சாலையிலும் இப்படி கட் அவுட் வைத்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக, இந்த ஷிவ்டே யார் என்று புனேவே குழம்பிப் போய் இருந்துள்ளது .

போலீஸ் கைது
இந்த நிலையில் அந்த கட் அவுட் கம்பெனியை வைத்து போலீஸ் நிலேஷை கண்டுபிடித்தது. பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொது விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த கட் அவுட் வைக்க மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளாராம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications