நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலி.. குறுக்கே வந்த லாரியால் விபத்தில் சிக்கிய கார்.. என்ன நடந்தது?
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மாஜி பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் ‛ரேஞ்ச் ரோவர்' கார் விபத்தில் சிக்கியது. சாலையில் திடீரென்று குறுக்கே வந்த லாரியால் அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் சவுரவ் கங்குலி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ரசிகர்களால் தாதா என அழைக்கப்படும் கங்குலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அவர் பிசிசிஐ-யின் தலைவராகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் தான் நேற்று இரவு சவுரவ் கங்குலி தனது ‛ரேஞ்ச் ரோவர்' காரில் மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.
சவுரங் கங்குலியின் ‛ரேஞ்ச் ரோவர்' காரில் அமர்ந்து இருக்க மேலும் 2 கார்கள் அவருடன் சென்றன. தாதன்பூரில் செல்லம் துர்காபூர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் இந்த கார்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென்று லாரி ஒன்று கங்குலியின் காரை முந்தி செல்ல முயன்றது. இந்த வேளையில் விபத்தை தடுக்க கங்குலி பயணித்த கார் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கார்களும் பிரேக் பிடித்தன. ஆனால் திடீரென்று கங்குலியின் கார் நின்றதால் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார்கள் அடுத்தடுத்து ஒன்றொடொன்று மோதின. இதில் கங்கலியின் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக கங்குலி மற்றும் அவரது கார் டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் கங்குலியின் கான்வேயில் இடம்பெற்ற 2 கார்கள் கொஞ்சம் அதிக சேதத்தை சந்தித்தன. கங்குலியின் கார் லேசாக சேதமடைந்தது. காரை விட்டு இறங்கிய கங்குலி 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்தார். மேலும் தன்னுடன் வந்தவர்களிடம் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அதன்பிறகு சவுரங் கங்குலி அங்கிருந்து காரில் புறப்பட்டு திட்டமிட்டபடி பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பிறகு சவுரங் கங்குலி பர்த்வார் விளையாட்டு சங்கத்தில் நடந்த விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛பர்த்வானில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விழாவுக்காக என்னை அழைத்ததை பெருமையாக நினைக்கிறேன். பிடிஎஸ் (பர்த்வான் விளையாட்டு சங்கம்) நீண்ட காலமாக என்னை அழைத்து கொண்டு இருந்தது. இப்போது நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சங்கம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல விளையாட்டு வீரர்கள் உருவாக்கி உள்ளனர். தொடர்ந்து நாட்டுக்காக நாம் இங்கிருந்து வீரர்களை உருவாக்கி தர வேண்டும்'' என்று பேசியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications