பாஸ், உங்க காபியில் தினமும் எச்சிலை துப்பினேன்: தீயாக பரவும் ஊழியரின் போஸ்ட்
டெல்லி: அலுவலகம் ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்த வாலிபர் ஒருவர் தனது பாஸின் தொல்லை தாங்க முடியாமல் காபியில் தினமும் எச்சிலை துப்பிக் கொடுத்தது பற்றி துண்டு சீட்டில் எழுதி வைத்தது சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அலுவலகம் ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்த வாலிபர் ஒருவரை அவரது பாஸ் ஓவராக அதிகாரம் செய்துள்ளார். காபி எடுத்துக் கொண்டு வருவது, பேப்பர் கொடுப்பது என்று அந்த வாலிபரை அவரது பாஸ் வேலைக்காரரை போன்று நடத்தியுள்ளார்.

இதனால் கடுப்பான அவர் வேலையை விட்டு சென்றுவிட்டார். வேலையை விட்டு செல்லும் முன்பு அவர் ஒரு சிறு துண்டு சீட்டில் எழுதி வைத்ததை பார்த்து அவரின் பாஸ் திடுக்கிட்டார்.
அந்த துண்டு சீட்டில் வாலிபர் எழுதியிருப்பதாவது,
இதை நீங்கள் படிக்கையில் நான் இங்கிருந்து சென்றிருப்பேன். என்னை அதிகாரம் செய்ததை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன். அதனால் நீங்கள் பெருமிதம் கூட அடைந்திருப்பீர்கள். நான் தினமும் உங்களுக்கு கொடுத்த காபியில் எச்சிலை துப்பிக் கொடுத்தேன் என்பதை அறிந்த பிறகு எப்படி உணர்வீர்கள் என்று வியக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை வின் இன் ரோம் என்பவர் ரெட்டிட்டில் வெளியிட்டுள்ளார். இந்த துண்டு சீட்டு சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications