லோக்சபா தேர்தல்.. பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியாவின் மகன் பிரியங்கா தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகளின் ரகசியக் கூட்டத்தில் ராகுலுடன் பிரியங்காவும் கலந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 99ம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் காங்கிரஸுக்கு பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார். எனவே, இப்போது பிரியங்காவை வைத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான செய்திகள் வெளியாகின்றன.
மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பிரியங்கா பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த அக்டோபர் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் ஒரு பேரணியில் பிரியங்கா கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
உத்தரப்பிரதேசத்திலும் பிரியங்கா கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. சோனியா குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், பிரியங்கா காந்தியின் பிரசாரம் குறித்து கட்சி இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
