தாவூத்துடன் எனக்குத் தொடர்பு இருந்திருந்தால் கிரிக்கெட் வீரராகவே இருந்திருக்க மாட்டேன்... ஸ்ரீசாந்த்
கொச்சி: தாவூத் இப்ராகிமுடன் எனக்குத் தொடர்பு இருந்திருந்தால், நான் கிரிக்கெட் வீரராகவே இருந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
டெல்லி கோர்ட்டால் மேட்ச் பிக்ஸிங் வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில் இன்று ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னைத் தாவூத்துடன் தொடர்புப்படுத்திப் பேசினார்கள். அவருடன் தொடர்பு இருந்திருந்தால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். இப்படி பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்றார். ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியிலிருந்து:

துபாயில் இருந்திருப்பேன்
நான் தாவூத்துடன் தொடர்பு வைத்திருந்தால் இங்கே இருந்திருக்க மாட்டேன். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். துபாயிலோ அல்லது வேறு எங்கேயோ இருந்திருப்பேன்.

எல்லாப் புகழும் உங்களுக்கே
நெருக்கடியான காலகட்டத்தில் எனக்குத் துணை நின்ற அனைவருக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

சம்பாதித்தது எல்லாமே கஷ்டப்பட்டுத்தான்
நான் சம்பாதித்த ஒவ்வொரு பணமும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. தவறான வழியில் வந்ததில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுபட்டுள்ளேன்.

இன்று முதல் பிராக்டிஸ்
இன்று முதல் கிரிக்கெட் பிராக்டிஸை தொடங்குகிறேன். மீண்டும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பிசிசிஐ தனது முடிவை திரும்பப் பெறும் என்றும் நம்புகிறேன் என்றார் ஸ்ரீசாந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications