இலங்கையில் தொடரும் போராட்டம், கண்ணீர்ப் புகை வீச்சு: அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி மாலத்தீவு சென்றுள்ள நிலையில், தாமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பு ஜனாதிபதி ஆகிவிடுகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
இந்த நேரத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக்கு எதிரான முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரண முகக் கவசமே அணிந்திருந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் நடந்த போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தலைமறைவான கோட்டாபய புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்று தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, இன்று காலை போராட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து பேரணியாக கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் சென்றனர். பிறகு போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை நடத்தினர்.
- இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் - காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்
- கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
இந்நிலையில், ரணில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பது அவர் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை செயல்படுத்தியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=-NrUV1cxsYU
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications