மும்பை இல்லத்தில் ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது!
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி பூதஉடலாக மும்பைக்கு திரும்பியது.
மும்பை: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவி உயிரிழந்து 3 நாட்களான நிலையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணை முடிந்து எம்பாமிங் செய்யப்பட்டு இன்று போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து மாலை 6.45 மணிக்கு துபாயில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுடன் கணவர் போனி கபூர், அவருடைய சகோதரர் சஞ்சய் கபூர் மற்றும் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜூன் உள்ளிட்ட 10 பேர் வந்தனர்.
மும்பை விமான நிலையத்திற்கு இரவு 9.40 மணியளவில் விமானம் வந்தடைந்த நிலையில் விமான நிலையத்தில் அனில் அம்பானி மற்றும் போனி கபூரின் குடும்பத்தினர் ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷியும் விமான நிலையத்தில் தனது தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்பி மாற்று வழியில் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீதேவினியின் உடலானது விமான நிலையத்தில் இருந்து மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
Mumbai: #Sridevi's mortal remains being taken to her Lokhandwala residence pic.twitter.com/uQiLy5EZcv
— ANI (@ANI) February 27, 2018
மும்பையில் உள்ள ஸ்ரீதேவி போனிகபூரின் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று திரையுலக பிரபலங்களும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை காலை 9.30 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அருகில் உள்ள பொதுஇடத்தில் பிற்பகல் 12.30 மணி வரை வைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் 5 மணியளவில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications