பயங்கரவாதியை சுற்றி வளைத்த ராணுவம்! அனைவரது கையிலும் இருந்த "பிஸ்கட்!" ஏன் தெரியுமா? காஷ்மீரில் ஷாக்
ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் டாப் தலைவர் ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். சீக்ரெட்டாக நடந்த இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததில் பிஸ்கட்டிற்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் அமரன். இது மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இதில் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மட்டுமின்றி ராணுவத்தினர் குறித்தும் விரிவாகக் காட்டியிருப்பார்கள்.

காஷ்மீர் பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பயங்கரவாதிகளைப் பிடிக்க நடத்தப்படும் ஆப்ரேஷன்கள் எவ்வளவு தூரம் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் என்பதை இதில் தெளிவாக விளக்கி இருப்பார்கள். இதற்கிடையே, அதுபோல சமீபத்தில் காஷ்மீரில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளைப் பிடிக்க நடந்த ஆப்ரேஷன் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த ஆப்ரேஷனில் பிஸ்கட் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பினர் தளபதி உஸ்மான் என்பவர் ஸ்ரீநகர் அருகே உள்ள கான்யாரில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகும். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதர்க்காக சுமார் 9 மணி நேரம் பக்கவாக திட்டமிட்டு உஸ்மானை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த மேஜர் துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
யார் இந்த உஸ்மான்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் உள்ளூர் போலீசும் இணைந்து நடத்திய ஆப்ரேஷனில் உஸ்மான் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்து A டூ Z அறிந்த நபராக இருந்த உஸ்மான், 2000களில் அப்பகுதியில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய நபர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு பாகிஸ்தானில் பதுங்கிய உஸ்மான், 2016-17 ஆம் ஆண்டில் மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவி இருக்கிறான். கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் வானியை இந்த உஸ்மான் சுட்டுக் கொன்றுள்ளான்.
பிஸ்கட்: உஸ்மான் கான்யாரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து 9 பகுதியில் பக்காவாக திட்டமிட்டு ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர். அந்த பகுதியில் ராணுவத்தினருக்கு இருந்த முக்கிய சவாலே அங்கிருந்த தெருநாய்கள் தான். தெருநாய்கள் குரைக்கத் தொடங்கினால் பயங்கரவாதிகள் அலர்ட் ஆகிவிடுவார்கள். இதனால் நாய்கள் குரைப்பதைத் தடுக்க ராணுவ வீரர்கள் பிஸ்கட் உடன் களத்திற்குச் சென்றுள்ளனர்.
தெருநாய்களுக்கு பிஸ்கட்களை போட்டுக் கொண்டே அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். பிஸ்கட் இருந்ததால் நாய்களும் குரைக்கவில்லை. இதனால் உள்ளே இருந்த பயங்கரவாதிகளுக்கு ராணுவம் தங்களைச் சுற்றி வளைப்பது தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு:பல மணி நேரம் நீட்டித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் உஸ்மான் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவே இப்போது தகவல் வெளியாகியுள்ளது. டாப் பயங்கரவாதியைப் பிடிக்க ராணுவத்தினர் நடத்திய இந்த ஆப்ரேஷனில் பிஸ்கட் பயன்படுத்தப்பட்டு இருப்பது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications