மோடியின் முதல் அமைச்சரவை விரிவாக்கம் - 4 கேபினட், 17 இணை அமைச்சர்கள் பதவியேற்பு
டெல்லி: பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி இன்று முதன்முறையாக தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 5 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். அவரது அமைச்சரவையில் தற்போது 45 பேர் உள்ளனர். அதில் பிரதமர் உள்பட 23 பேர் கேபினட் அமைச்சர்கள், மற்றவர்கள் இணை அமைச்சர்கள். இந்நிலையில் தான் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் 21 பேருக்கு பதவி தரப்பட்டுள்ளது. புதியவர்களை சேர்த்து மோடி அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆகியுள்ளது.
புதிய அமைச்சர்கள் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில் இன்று பிற்பகலில் நடந்த பதவியேற்பு விழாவில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கேபினட் அமைச்சர்கள்:
1. மனோகர் பாரிகர்
2. சுரேஷ் பிரபாகர் பிரபு
3. ஜெகத்பிரகாஷ் நட்டா
4. சவுத்ரி பீரேந்திர சிங்

இணை அமைச்சர்கள்:
5. முக்தார் அப்பாஸ் நக்வி
6. பண்டாரு தத்தாத்ரேயா
7. ராஜீவ் பிரதாப் ரூடி
8. ஒய்.எஸ். சவுத்ரி
9. கிரிராஜ் சிங்
10. பாபுல் சுப்ரியோ
11. ஹன்ஸ்ராஜ் அஹிர்
12. சாத்வி நிரஞ்சன் ஜோதி
13. விஜய் சாம்ப்லா
14. டாக்டர் மகேஷ் சர்மா
15. ராம் க்ரிபால் யாதவ்
16. ஹரிபாய் சவுத்ரி
17. பேராசிரியர் சான்வார் லால் ஜாட்
18. மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தரியா
19. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்
20. பேராசிரியர் டாக்டர் ராம்சங்கர் கட்டேரியா
21. கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
சிவசேனா பரிந்துரைத்த அனில் தேசாய்க்கு பதில் மோடி சுரேஷ் பிரபுவுக்கு கேபினட் பதவி வழங்கினார். இதைனால் சிவசேனா பதவியேற்பு விழாவை புறக்கணித்தது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications