72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும் தகவல்
நேபாள விமான விபத்தில் 72 பேர் பலியான நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காத்மண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
பண்டிகை தினத்தன்று நடைபெற்ற இந்த பயங்கர விபத்து அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

72 பேரும் பலியாகினர்
யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடி.ஆர் 72 என்ற அந்த விமானம் பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்த போது சேதி ஆற்றின் கரையில் மோதி தீ பிடித்து விபத்தில் சிக்கியது. நேபாள நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்களில் ஒன்றாக இது அமைந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 72 பேரும் பலியாகினர். 71 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. ஒருவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டன.

5 பேர் கொண்ட விசாரணைக்குழு
விமான விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விமானத்தின் இரு என்ஜின்களும் செயல் இழந்து போனதால் இந்த விமான விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல் வெளியானது. எனினும் விமானியின் தவறுதலால் என்ஜின் செயல் இழப்பு ஏற்பட்டதா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. விபத்து குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

மனித தவறுகள் காரணமா?
இந்த நிலையில், இந்த விபத்துக்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விமானத்தின் இரு விமானிகளில் ஒரு விமானி, விமானம் தரையிறங்குவதற்கான லேண்டிங் லிவரை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக விமானத்தின் என்ஜின் பவரை ஜீரோவாக கொண்டு வரும் லிவரை பயன்படுத்தியதால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று முதன்மை அறிக்கையில் உள்ள தகவல்கள் கசிந்துள்ளன.

இரு முறை விமானி குறிப்பிட்டுள்ளதாக
மேலும் இரு என்ஜின்களும் நின்று போனதால் விமானத்தின் உந்து ஆற்றல் செயல் இழந்து கீழே விழுந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் இரு என்ஜின்களும் செயல் இழந்து போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானது என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானம் தரையிறங்குவதற்கான ஒப்புதல் கொடுத்த போது விமானி என்ஜினில் இருந்து எந்த ஆற்றல்யும் (power) வரவில்லை என்று இரு முறை விமானி குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள் முதல்கட்ட அறிக்கை
இந்த விபத்து தொடர்பான விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் விசாரணைக்குழு உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின் படி விமான விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள் முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடைபெற்று ஒராண்டுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். உலக அளவில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications