ஜெயலிதாவுக்காக கர்நாடகத்திற்கு பல கோடி மக்கள் வரிப்பணத்தை அழப் போகும் தமிழக அரசு!
பெங்களூரு: கடந்த 12 வருடமாக கர்நாடகத்தில் நடந்து வந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாம்.
தமிழக அரசு வழங்கப் போகும் இந்த செலவுத் தொகை முழுவதும் மக்களின் வரிப்பணம் என்பது மிக மிக கொடு்மையான ஒன்று.
2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையை முடித்த பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்றவர்களுக்குத் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நான்கு பேரும் பின்னர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அதில் விடுதலையாகி விட்டனர். ஆனால் அந்தத் தீர்ப்பு தற்போது பெரும் நகைச்சுவைக்கிடமாக விட்டது.. காரணம் நீதிபதி குமாரசாமி போட்ட தப்புக் கணக்கால்.
இந்த நிலையில் கடந்த 12 வருடமாக இந்த வழக்கை நடத்தியற்காக ஆன செலவை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்குக்கான செலவுத் தொகையை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்று வழக்கை பெங்களூருக்கு மாற்றியபோது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு பெர்சனல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்ததும் அது தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு பணத்தைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படும். இதுவரை தமிழக அரசிடமிருந்து ஒரு பைசா கூட நாங்கள் வாங்கவில்லை.
மேலும் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்கறிஞருக்கான கட்டணத்தையும் தமிழக அரசுதான் தர வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்க முன்பு, கர்நாடக அரசின் பெர்சனல் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மாநில அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன்படி இதுவரை கர்நாடக அரசுக்கு ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை செலவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்ததாம். ஆனால் அதில் பல செலவுக் கணக்கை சேர்க்காமல் விட்டு விட்டதாக கூறி மாநில அரசு அந்த அறிக்கையை திருப்பி அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அழப் போகும் தொகை பல கோடிகள் என்பது வேதனைக்குரியது, சிந்தனைக்குரியது!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications