காஷ்மீர், ஹரியானா தேர்தல் ரிசல்ட்! நொடிக்கு நொடி துல்லியமாக அறிய டெய்லிஹண்ட்டுடன் இணைந்திருங்கள்
சென்னை: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள், தேர்தல் தொடர்பான கட்டுரைகளை துல்லியமாகவும், வேகமாகவும் Dailyhuntல் உடனுக்குடன் நீங்கள் பெற முடியும். அக். 8ம் தேதி முடிவுகள் வெளியாகும் நிலையில் தேர்தல் தொடர்பான ஆழமான செய்திகளை பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்.
ஹரியானா தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இருப்பினும் இந்த தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகளும் கூட, இதையே பிரதிபலித்தன. அதாவது மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5ஐ காங்கிரஸ் கைப்பற்றியது.

சட்டமன்ற தேர்தல் போட்டியை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் கண்டிருக்கிறது. தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் கண்டுள்ளன.
பாஜகவின் முதல்வர் முகமாக, தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் முகமாக பூபேந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். ஹரியானவை பொறுத்தவரை பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாத மாநிலங்களாக இருக்கிறது.
குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும் பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்பியுள்ளன.
விவசாயிகளை பொறுத்தவரை, மோடி 2.O அரசின்போது கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற டெல்லி போராட்டத்தில், ஹரியானா விவசாயிகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது. சமீபத்தில் கூட கங்கனா ரனாவத் வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, தங்களுக்கும், ரனாவத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்த மாநிலத்தில் வேலையின்மை, தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என்று இம்மாநில இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் மல்யுத்த வீரராங்கனைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பிரச்சனை இம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்த வினேஷ் போகத் தற்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
மட்டுமல்லாது, கேலோ இந்தியா விளையாட்டுகளுக்காக குஜராத்துக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள ஹரியானா மாநிலத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் சட்டமன்ற தேர்தல் நடந்திருக்கிறது. நாளை (அக்.8) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
ஜம்மு காஷ்மீர்: இங்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்தே இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் இம்மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும், சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்று வருகின்றன.
இதற்கிடையில் செப்டம்பர் 18ம் தேதி 24 தொகுதிகளுக்கும், செப்டம்பர் 25ம் தேதி 24 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் என மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் பாஜக தனியாக களம் இறங்கியிருந்தது. மறுபுறம் காங்கிரஸானது, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, சிபிஎம் என மூன்று கட்சிகளை உள்ளடக்கி கூட்டணியாக தேர்தலை எதிர்கொண்டது. தவிர மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனியாக களம் கண்டது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலமாக இருந்த பகுதியை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றியதால், பாஜக மீது அதிருப்தி நிலவுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில் நிற்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், மூன்று கட்ட தேர்தலும் எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு சுமார் 170க்கும் அதிகமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன. சில அரசியல் தலைவர்கள் வீடுகளில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த முறை அப்படியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதுமட்டுமல்லாது கடந்தமுறையைவிட இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 23லிருந்து 43ஆக உயர்ந்திருக்கிறது. மேற்கு பாகிஸ்தான் அகதிகள், வால்மீகி சமாஜ் மற்றும் கோர்கா சமூத்தினரும் இந்த முறை வாக்குரிமை பெற்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications