ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா முயன்றால் அதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
Recommended Video

டெல்லி: வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

போராட்டம் தீவிரமடைந்ததை பார்த்த தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஆலை இழுத்துப்பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லாது, இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றம் செல்லக்கூடும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் மனு தாக்கல் செய்தால், அந்த வழக்கு விசாரணையில் எங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூயிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு விசாரணையின் போது எங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications