13 மாநிலங்களில் 2 நாட்களில் பலத்த மழை, சூறாவளிக் காற்று வீசும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்
அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த வாரம் திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது.
மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

புயல் எச்சரிக்கை
திடீரென வீசிய இந்த புழுதி புயலுக்கு 120க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் புயலில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அம்மாநில அரசுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பலத்த மழை
அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை
அதேபோல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் மழை மற்றும் புழுதிப்புயல் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications