முடிக்காக தூக்குபோட்டு உயிரை விட்ட கல்லூரி மாணவன்
பெங்களூர்: தலை முடி வளர்க்க எடுத்துக்கொண்ட சிகிச்சை பலனளிக்காததால் கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழுக்கை தலையில் முடி முளைக்க வேண்டுமா, ஆப்பிரிகா, அமெரிக்கா காடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அருமருந்து எங்களிடமுள்ளது என்பது போன்ற வாசகங்களுடன் டிவி சேனல்களில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதை வாங்கிய பயனாளிகள் பலரும், தலையில் மிளகாய் அரைத்துவிட்டதாகவே புலம்புகிறார்கள். ஆனால் முடி போனால் என்ன என்று அவரவர் வேலையை பார்ப்பார்கள்.
ஆனால், பெங்களூரில் கல்லூரி மாணவன் ஒருவர் முடிக்காக உயிரையே விட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வாராங்கல்லை சேர்ந்த மகேந்திரா (23) பெங்களூர் சர்ஜாப்பூர் சாலையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்துவந்தார்.
எச்எஸ்ஆர் லேஅவுட்டிலுள்ளள மாணவர் தங்கும் விடுதியில் சகமாணவர்கள் சிலருடன் தங்கியபடி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு தலையில் அதிக அளவு முடி கொட்டி சிறிது முன்வழுக்கையாக இருந்துள்ளது. இதனால் தாழ்வுமனப்பான்மையில் புழுங்கிய மகேந்திரா, தலைமுடியை வளர்க்க சிகிச்சை எடுத்துவந்துள்ளார்.
ஆனால் வழுக்கை தலையில் முடி முளைப்பதாக இல்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மகேந்திரா நண்பர்கள் வெளியே சென்ற நேரத்தில் ஹாஸ்டல் அறையிலுள்ள மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துவிட்டார். நள்ளிரவு சுமார் 1 மணிக்கு வெளியே சென்ற நண்பர்கள் திரும்பி வந்தபோது இதுபற்றி தெரிந்துள்ளது. அவர் தற்கொலை கடிதம் எழுதி வைக்கவில்லை என்றபோதிலும் போலீசாரின் விசாரணையில் மகேந்திராவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications